You are here
Home > Uncategorized > ஒ.பி.சி நலனுக்காக பாராளுமன்ற குழு

ஒ.பி.சி நலனுக்காக பாராளுமன்ற குழு

புதுடெல்லி:இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின்(ஒ.பி.சி) நலத் திட்டங்களுக்காக புதிய பாராளுமன்றக்குழு உருவாக்கப்படுகிறது. இதுத்தொடர்பான தீர்மானத்தை நேற்று மக்களவை அங்கீகரித்தது.

20 மக்களவை எம்.பிக்களும், 10 மாநிலங்களவை எம்.பிக்களும் உள்ளிட்ட 30 உறுப்பினர்கள் ஒ.பி.சி நலத்திட்டங்களுக்கான குழுவில் இடம்பெறுவர். இதனை பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சல் அறிவித்துள்ளார்.

தேசிய பிற்படுத்தப்பட்ட கமிஷனின் அறிக்கைகள் குழு பரிசோதித்த பிறகு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக இரு அவைகளிலும் அறிவிப்போம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Top