You are here
Home > Uncategorized > ஐரோம் ஷர்மிளாவுக்காக ராஜ்காட்டில் பிரார்த்தனை

ஐரோம் ஷர்மிளாவுக்காக ராஜ்காட்டில் பிரார்த்தனை

புதுடெல்லி:ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மணிப்பூர் மாநிலத்தில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்திவரும் இரும்புப்பெண்மணி ஐரோம் ஷர்மிளாவுக்காக காந்தி சமாதி அமைந்திருக்கும் ராஜ்காட்டில் மெழுகுத்திரி ஏந்தி பிரார்த்தனை நடத்தப்பட்டது.

‘சேவ் ஷர்மிளா” என்ற பிரச்சாரநிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மனித உரிமை ஆர்வலர்கள் ராஜ்காட்டிற்கு வருகைத்தந்தனர்.மாலை ஆறுமணி அளவில் ராஜ்காட்டில் திரண்ட மனித உரிமை ஆர்வலர்கள் பாட்டு பாடியும், பிரார்த்தித்தும் ஐரோம் ஷர்மிளாவுக்கு தங்களது ஆதரவை பிரகடனப்படுத்தினர்.

ஷர்மிளாவின் கோரிக்கையை செவியேற்க அரசு தயாராகவேண்டும்.இதற்காக அனைத்து கட்சி குழு, தேசிய மனித உரிமை கமிஷன் பிரதிநிதி குழு, மகளிர் கமிஷன் ஆகியவற்றை மணிப்பூருக்கு அனுப்பவேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரான அரசு காந்தீய வழியில் போராட்டம் நடத்தும் ஒரு மணிப்பூர் பெண்மணியின் வார்த்தைகளை கேட்பதற்கு கூட தயாராவதில்லை என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

நேசனல் அலைன்ஸ் ஆஃப் பீப்பிள்ஸ் மூவ்மெண்டின் ஃபைஸல்கான், காந்தி க்ளோபல் ஃபாமிலியின் வீணா பெஹன், ஜாக்ரதி மகிளா சமிதியின் நிர்மலாஷர்மா, ஸத்பாவனா மிஷனின் பேராசிரியர் வி.கே.திரிபாதி, ஏசியன் செண்டர் ஃபார் சோசியல் ஸ்டடீஸின் எம்.டி.தன்வீர், மிஷன் பாரதீயத்தின் சந்தீப் மிஷ்ரா உள்ளிட்ட பலர் உரைநிகழ்த்தினர்.இந்நிகழ்ச்சியில் மணிப்பூர் திரைப்பட உலகைச்சார்ந்தவர்கள் பலர் பங்கேற்றனர்

Leave a Reply

Top