You are here
Home > Uncategorized > ஐபிஎல் சூதாட்டத்தில் டோனி, ரெய்னாவுக்கு தொடர்பு?

ஐபிஎல் சூதாட்டத்தில் டோனி, ரெய்னாவுக்கு தொடர்பு?

ஜெய்ப்பூர்: ஐ.பி.எல். சூதாட்டத்தில் இந்திய அணித் தலைவரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான டோனி மற்றும் ரெய்னாவுக்கும் தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரணை செய்த அறிக்கை நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 170 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் தற்போது இந்திய அணிக்காக விளையாடி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கும் ஆட்ட நிர்ணயம் மற்றும் சூதாட்டத்தில் தொடர்பு உண்டு என்று கைது செய்யப்பட்ட சூதாட்ட புரோக்கரிடம் நடத்திய விசாரணை மூலம் தெரிய வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்ரம் அகர்வால் (ஹோட்டல் உரிமையாளர்), குருநாத் மெய்யப்பன் (சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர்), கிரிக்கெட் வீரர்கள் டோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் இன்னும் சிலருக்கு மேட்ச் பிக்சிங்கில் என்னென்ன தொடர்பு உண்டு என்பதை தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் உத்தம் ஜெயின் சொல்லியிருக்கிறார்.

கடந்த மே 12ம் திகதி ஜெய்ப்பூரில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 130 முதல் 140 ஓட்டங்கள் வரை எடுக்கும் என்று குருநாத் மெய்யப்பன் தனது கணிப்பை விண்டூ தாரா சிங்கிடம் (இந்தி நடிகர்) கூறியுள்ளார். அவர் சொன்னது போலவே ஏறக்குறைய நடந்துள்ளது.

சென்னை அணி அந்த ஆட்டத்தில் 141 ஓட்டங்களே எடுத்தது. ஆனால் இதன் மூலம் வைத்து மட்டுமே குருநாத் மெய்யப்பன், ‘மேட்ச் பிக்சிங்’ செய்தார் என்று அர்த்தம் கிடையாது. ஏனெனில் மெய்யப்பனுக்கு அது தொடர்பான தகவல்கள் நிறைய தெரிந்து இருந்தது. அல்லது அவருக்கு அந்த அணியின் ரகசிய தகவல்கள், திட்டங்கள், ஆட்டத்தின் நிலைப்பாடுகள் அனைத்தையும் எளிதாக பெறும் நிலை இருந்தது.

இது போன்ற தகவல்கள் மற்றவர்களுக்கு கிடைத்திருக்காது. சென்னை-ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டத்தை ‘பிக்சிங்’ செய்வதற்கு ஒரு ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று ஏப்ரல் 27ம் திகதி நடந்த இரவு விருந்து ஒன்றில் அகர்வால் உத்தம் ஜெயினிடம் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Top