You are here
Home > Uncategorized > ஐசிசி-யின் தரவரிசைப் பட்டியல் வந்தாச்சு!

ஐசிசி-யின் தரவரிசைப் பட்டியல் வந்தாச்சு!

ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் டிவில்லியர்ஸ் 872 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் வீராட் கோஹ்லி 870 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் ஜார்ஜ் பெய்லி, 3வது இடத்துக்கு முன்னேறினார்.

இந்திய அணியின் அணித் தலைவர் டோனி 6வது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

நியூசிலாந்தின் ராஸ் டெய்லர், 6 இடங்கள் முன்னேறி 10வது இடம் பிடித்தார். ஐந்து போட்டியிலும் அரைசதம் அடித்து, அதிக ஓட்டங்கள் (361) எடுத்த மற்றொரு நியூசிலாந்து வீரர் வில்லியம்சன், 20 இடங்கள் முன்னேறி 11வது இடத்தை இந்தியாவின் ஷிகர் தவானுடன் பகிர்ந்து கொண்டார்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல், தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், மேற்கிந்திய தீவுகளின் சுனில் நரைன் உள்ளனர்.

இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா 6வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இவர், 9வது இடத்தை ஆஸ்திரேலியாவின் மெக்கேவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Leave a Reply

Top