You are here
Home > Uncategorized > ஏற்காடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை! – எஸ்.டி.பி.ஐ.

ஏற்காடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை! – எஸ்.டி.பி.ஐ.

திருச்சி: “ஏற்காடு இடைதேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்ற முடிவை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு ஏகமனதாக எடுத்துள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை பரிசீலித்தும் இன்னும் பல்வேறு விஷயங்களையும் விவாதித்தும் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று எஸ்.டி.பி.ஐ. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் 20.11.2013 அன்று திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமை வகித்தார்.

“காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி மாநாட்டில் பங்கேற்ற மத்திய அரசையும், இப்பிரச்னையில் இரட்டை வேடம் போட்ட பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் தமிழக தலைவர்களையும் இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது” என்றும், “தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோமாரி நோயினால் கால்நடைகள் உயிரிழந்தும், பாதிக்கப்பட்டும் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை அடைந்துள்ளனர். இந்நோய் வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு விரைவாக செயல்பட்டு இந்நோயை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த மாடுகளுக்கு தலா ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிடவும் தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது” என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Top