You are here
Home > Uncategorized > எகிப்து:26-ஆம் தேதி என்.ஜி.ஒக்கள் மீதான விசாரணை

எகிப்து:26-ஆம் தேதி என்.ஜி.ஒக்கள் மீதான விசாரணை

கெய்ரோ:அரசை கவிழ்க்க முயற்சி செய்த வழக்கில் 19 அமெரிக்கர்கள் உள்ளிட்ட 43 அரசு சாரா அமைப்புகளின் உறுப்பினர்கள் மீதான விசாரணை இம்மாதம் 26-ஆம் தேதி துவங்குகிறது. பல பத்தாண்டுகளாக தொடரும் அமெரிக்காவுடனான உறவை சீர்குலைக்கச் செய்யும் என கருதப்படும் இவ்விசாரணையில் வருகிற 26-ஆம் தேதி ஆஜராகுமாறு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அமெரிக்க போக்குவரத்துதுறை அமைச்சரின் மகனும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் அடங்குவார். இவர் உட்பட பலரையும் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்க தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆறு அமெரிக்கர்கள் தற்போது எகிப்தில் உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று முன்னரே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

செர்பியா, லெபனான், ஜெர்மனி, நார்வே, ஜோர்டான்,ஃபலஸ்தீன் ஆகிய நாடுகளைச் சார்ந்தவர்கள் உள்பட 16 எகிப்தியர்கள் மீது இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான மெனா அறிவித்துள்ளது.

அமெரிக்கர்களிடம் விசாரணை நடத்தக்கூடாது என்று ஒபாமா அரசு எகிப்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. விசாரணை நடத்தினால் ஒவ்வொரு வருடமும் அளித்துவரும் 150 கோடி டாலர் தொகையை முடக்குவோம் என்று அமெரிக்கா மிரட்டியது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்கர்கள் உள்ளிட்டோருக்கு சம்மன்ஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு பணத்தைப் பெற்று அரசுக்கு எதிராக இவ்வமைப்புகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது என்று வெளியுறவு ஒத்துழைப்பு மற்றும் திட்ட அமைச்சர் ஃபாயிஸா அபுல் நகா கூறியுள்ளார்.

ஏகாதிபத்தியவாதி ஹுஸ்னி முபாரக்கின் அரசிலும், தற்போதைய ராணுவ அரசிலும் நகா அமைச்சராக பதவி வகிக்கிறார். எகிப்தின் இறையாண்மையை மீறி வெளிநாட்டு பணத்தை பெற்றதாக சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நேசனல் டெமோக்ரேடிக் இன்ஸ்ட்யூட், இண்டர்நேசனல் ரிபப்ளிகன் இன்ஸ்ட்யூட், இண்டர்நேசனல் செண்டர் ஃபார் ஜெர்னலிஸ்ட்ஸ், ஃப்ரீடம் ஹவுஸ், ஜர்மனீஸ் காண்ட்ராட்-அத்னைன் ஃபவுண்டேசன் ஆகிய அமைப்புகளைக் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஐந்து அமைப்புகள் ஐந்துகோடி டாலர் வெளிநாட்டுப் பணத்தை சட்டவிரோதமாக பெற்றது நிரூபணமாகியுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இவர்களின் அலுவலகங்களை ரெய்டு செய்த ராணுவம் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியது. பின்னர் அலுவலகங்களுக்கு சீல் வைத்தது.

அதேவேளையில், ராணுவ அரசுக்கு எதிராக போராட்டம் வலுவடைந்த சூழலில் தங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதாக அரசு சாரா அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Top