You are here
Home > Uncategorized > இந்தியா > எகிப்து சிலைகளை இந்து கடவுள் சிலை என்று பொய் பரப்பிய இந்துத்துவ அமைப்புகள்!

எகிப்து சிலைகளை இந்து கடவுள் சிலை என்று பொய் பரப்பிய இந்துத்துவ அமைப்புகள்!

இந்து கடவுள்களின் சிலைகள் எகிப்தில் உள்ள அகழ்வாராய்சித் தலம் ஒன்றில் கிடைத்துள்ளது என்று கூறி புகைப்படம் ஒன்று வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் சமூகவலைதளங்களின் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

அந்த புகைப்படத்தில் `இஸ்லாமிய நாடான எகிப்தில் இந்து கடவுள்களின் சிலைகள் கிடைத்துள்ளன` என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதில் இம்மாதிரி உலகில் எங்கு தோண்டினாலும் இந்து கடவுள்களின் சிலையை நாம் கண்டறியலாம்; இது உலகம் முழுவதும் இந்து மதம் பரவி இருந்தது என்பதை காட்டுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஒரு அகழ்வாராய்ச்சி செய்யும் இடம் போல காட்சியளிக்கிறது. அங்கு ஆள் ஒருவரும் காணப்படுகிறார். மேலும் சில சிலைகளின் பின்புறம் தெரிகிறது.

இந்த புகைப்படத்தை கூகுளில் ‘ரிவர்ஸ் இமேஜ் தேடல்’ ஆய்வு செய்தால் இது ஒரு உண்மையான புகைப்படம் என்பது தெரியவருகிறது; ஆனால், அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வலதுசாரி இந்துத்துவ அமைப்புகள் தெரிவித்த தகவலுக்கு முரணானதாக இருக்கிறது.

எகிப்தில், அகழ்வாராய்ச்சி செய்யும் இடத்தில் இந்து கடவுள்களின் சிலைகள் கிடைத்ததாக எந்த ஓர் ஆதாரமும் இல்லை.

கி.மு. 2500 முதல் கி.மு. 2350 வரை எகிப்தை ஆண்டவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சிலைகள் கிடைத்துள்ளன. கடந்தவாரம் எகிப்தில் உள்ள தொல்பொருள் ஆய்வாளர்கள், அரிய கல்லறை ஒன்றை கண்டறிந்தனர். அது 4,400 ஆண்டுகள் பழமையான இடம் என்றும், மதகுரு ஒருவர் புதைக்கப்பட்ட இடம் என்பதும் கண்டறியப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளில் இம்மாதிரியான தலம் கண்டறியப்பட்டது இதுவே முதல்முறை என எகிப்தின் தொல்பொருள் ஆய்வு முதன்மை கவுன்சிலின் பொதுச் செயலர் முஸ்டஃவா வசிரி தெரிவித்துள்ளார்.

 நன்றி: பிபிசி தமிழ்

Leave a Reply

Top