You are here
Home > Uncategorized > எகிப்து:முதல் அதிபர் தேர்தல் மே மாதம்

எகிப்து:முதல் அதிபர் தேர்தல் மே மாதம்

கெய்ரோ:முபாரக் ஆட்சியை அகற்றிய பிறகு முதன் முதலாக எகிப்தின் அதிபர் தேர்தல் வருகிற மே மாதம் இறுதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் முஹம்மது அதிய்யாவை மேற்கோள்காட்டி அல் அஹ்ராம் பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டுள்ளது. தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், வேட்பாளர்களுக்கு மனு தாக்கல் செய்ய மார்ச் 10 ஆம் தேதி முதல் 3 வார கால அவகாசமும், தொடர்ந்து பிரச்சாரத்திற்கு 45 தினங்களும் அனுமதித்துள்ளதாக பத்திரிகை கூறுகிறது. தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் பின்னர் அறிவிக்கும்.

முபாரக் பதவி விலகிய பிறகு ஆட்சி புரியும் ராணுவ தலைமைக்கு எதிராக தீவிர போராட்டம் நடந்துவருவதை தொடர்ந்து ஏற்கனவே அறிவித்த காலத்தை விட ஒரு மாதம் முன்னதாக அதிபர் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னர் பாராளுமன்ற கீழ் அவைக்கு நடந்த தேர்தலில் இஸ்லாமிய கட்சியினர் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றினர்.

இதற்கிடையே, எகிப்தில் அமெரிக்கா குழப்பத்தை ஏற்படுத்த முனைவதாக எகிப்து அமைச்சர் ஃபாஇஸா அபுல் நாகாவின் அறிக்கைக்கு ஆதரவான கருத்துக்களை அந்நாட்டு பத்திரிகைகளும் வெளியிட்டுள்ளன. தன்னார்வ தொண்டர்களுக்கு நிதியுதவி அளித்து வன்முறையை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்வதாக அல் அஹ்ராம் பத்திரிகை கூறுகிறது.

அண்மையில் எகிப்தில் அமெரிக்காவைச் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்பாளர்கள் மூலம் மோதல் சூழலை உருவாக்க முயன்றதாக குற்றம் சாட்டி அமெரிக்க தன்னார்வ தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலைச்செய்ய வேண்டும் என்று அமெரிக்கா விடுத்த கோரிக்கையை எகிப்து நிராகரித்துவிட்டது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவு பாதித்துள்ளது.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Top