You are here
Home > Uncategorized > எகிப்து:அரசியல் சாசன குழு பிரச்சனைக்கு தீர்வு!

எகிப்து:அரசியல் சாசன குழு பிரச்சனைக்கு தீர்வு!

கெய்ரோ:புரட்சிக்கு பிந்தைய எகிப்தில் புதிய அரசியல் சாசன உருவாக்க குழு குறித்த குழப்பங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் தீர்வு ஏற்பட்டுள்ளது. அரசியல் சாசன உருவாக்க குழுவில் பிரதிநிதித்துவம் குறித்து நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கும்  தற்பொழுது எகிப்தை ஆளும் ராணுவ கவுன்சிலுடன் கருத்தொற்றுமை ஏற்பட்டதைத் தொடர்ந்து இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

முன்னர், நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை எனக் குற்றம் சாட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதனைத் தொடர்ந்து அரசியல் சாசன உருவாக்க குழு கலைக்கப்பட்டது. தற்பொழுது ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி நூறு உறுப்பினர்கள் கொண்ட குழுவில் 39 பேர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவர். இதில் பாராளுமன்றத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் எண்ணிக்கையைப் பொறுத்து பிரதிநிதித்துவம் அமையும். இதன் அடிப்படையில் இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டிக்கு 16 உறுப்பினர்களும், ஸலஃபி கட்சியான அந்நூருக்கு ஏழு உறுப்பினர்களும் இடம் பெறுவர்.

பாராளுமன்ற உறுப்பினர்களை தவிர அரசியல் சாசன உருவாக்க குழுவில் இடம்பெறும் இதர உறுப்பினர்களில் 6 இடங்கள் நீதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்பது இடங்கள் நாட்டின் சட்ட வல்லுநர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 13 இடங்கள் யூனியன்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கெய்ரோவில் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்கு ஐந்து இடங்களும், காப்டிக் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்களுக்கு நான்கு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வருகிற செவ்வாய்க்கிழமை அரசியல் சாசன உருவாக்க குழுவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வுச் செய்யப்படுவர். ராணுவ கவுன்சில் தலைவர் மார்ஷல் தன்தாவியின் தலைமையிலான குழு நாட்டின் 22 கட்சிகளுடன் 48 மணிநேரம் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அரசியல் சாசன உருவாக்க குழு தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளது.

Leave a Reply

Top