You are here
Home > Uncategorized > இந்தியா > உ.பி. புலந்த்சர் கலவரத்திற்கு, தப்லீக் ஜமாஅத் நடத்திய இஜ்திமாவே காரணம்! சுதர்சன் டிவியின் போலி செய்தி!

உ.பி. புலந்த்சர் கலவரத்திற்கு, தப்லீக் ஜமாஅத் நடத்திய இஜ்திமாவே காரணம்! சுதர்சன் டிவியின் போலி செய்தி!

உத்திர பிரதேச மாநிலம் பகுதியில் சட்டவிரோத பசு-வதை நடப்பதாக அவதூறு பரப்பி ஒரு கும்பல் போலீசாருடன் கலவரத்தில் ஈடுபட்டபோது ஒரு காவலர் கொல்லப்பட்டார். இக்கலவரத்திற்கு காரணம் அங்கு இஜ்திமா கூட்டம் நடத்திய முஸ்லிம்களே என சுதர்சன் டிவி இன் தலைமை ஆசிரியர் சுரேஷ் சவ்ஹங்கே ட்விட்டரில் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் 3 அன்று பசு பயங்கரவாதிகளால் பரப்பப்பட்ட வதந்தியை தொடர்ந்து புலந்த்சார் மாவட்டம் சியான டெஹசில் பகுதியில் கலவரம் மூண்டது. அதனை தொடர்ந்து காவலர்களுடன் நடந்த மோதலில் ஒரு காவலர் கொல்லப்பட்டார். (இவர் அஹ்லாக் வழக்கை விசாரித்து வந்த அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது)

இந்த கலவரத்திற்கு முக்கிய காரணம் முஸ்லிம்கள் நடத்திய 3 நாள் இஜ்திமா கூட்டமே என்றும் மேலும் இதனை நடத்திய தப்லீக் ஜமாஅத் அமைப்பு இந்திய பாதுகாப்பு ஏஜென்சிஸ் இன் பார்வையில் இருப்பதாகவும் முஸ்லிம்களின் பலத்தை காண்பிக்கவே இக்கூட்டம் நடத்தப்பட்டதாகவும் சுரேஷ் சவ்ஹங்கே தெரிவித்துள்ளார்.

இதனை புலந்த்சர் காவல்துறை முற்றிலுமாக மறுத்துள்ளது. கலவரம் நடந்த இடத்திற்கும் இஜ்திமா நடந்த இடத்திற்கும் 45-50 கிலோமீட்டர் தொலைவு இருப்பதாகவும் கலவரத்திற்கும் இஜ்திமாவிற்கும் எந்தஒரு தொடர்பும் இல்லையென காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இதேபோன்று, கடந்த ஜூலை மாதம் உத்திர பிரதேச மசூதி ஒன்று காவல்துறைக்கு எதிராக ஆணை வெளியிட்டதாக பொய்யான செய்தியை சுதர்சன் டிவி வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Top