You are here
Home > Uncategorized > உ.பி:பெரும்பான்மை கிடைக்குமா? – காங்கிரசுக்கு சந்தேகம்!

உ.பி:பெரும்பான்மை கிடைக்குமா? – காங்கிரசுக்கு சந்தேகம்!

புதுடெல்லி:உத்தரபிரதேச மாநிலத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று காங்.கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்கலாம். ஆனால், அப்படியும் ஆட்சியை அமைக்க முடியாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைப்பதைத் தவிர வேறு என்ன வழி உள்ளது?

காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலம் பெற்றாலோ, தனிப் பெரும் கட்சியாக அதிக எம்.எல்.ஏ.க்களை பெற்றாலோ ஆட்சி அமைக்க உரிமை கோருவோம்” என்றார் திக்விஜய் சிங்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 3 மத்திய அமைச்சர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதைக் கூறுவது நடத்தை விதிமுறை மீறல் என்றால், நாங்கள் அந்த விதிமுறையை மீறியிருப்பதாக எடுத்துக்கொள்ளலாம், இல்லாவிட்டால் மீறவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்” என்றார்.

Leave a Reply

Top