You are here
Home > Uncategorized > உள்ளூர் அரபு மக்களை வெளியேற்றிவிட்டு யூத நகரத்தை ஸ்தாபிக்கும் இஸ்ரேல்!

உள்ளூர் அரபு மக்களை வெளியேற்றிவிட்டு யூத நகரத்தை ஸ்தாபிக்கும் இஸ்ரேல்!

டெல்அவீவ்: மண்ணின் மைந்தரான அரபு மக்களை கிராமத்தில் இருந்து வெளியேற்றி விட்டு யூத நகரங்களை நிறுவ இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

தெற்கு இஸ்ரேலின் நஜீவ் பாலைவனத்தில் கெஸிஃப், ஹிரான் நகரங்களை நிறுவ ஞாயிற்றுக்கிழமை அரசு அனுமதி அளித்துள்ளது. இனவெறி சட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் அரசு தொடருவதாக மனித உரிமை அமைப்பான அதாலா குற்றம் சாட்டியுள்ளது.

நகரங்களை நிர்மாணிக்கும் பொறுப்பு வீட்டு வசதி வாரிய அமைச்சகத்திடம் உள்ளது. அதாலாவின் குற்றச்சாட்டை அமைச்சகம் நிராகரித்துள்ளது. அரபுக்கள் வசிக்காத பகுதியில்தான் நகரங்களை நிறுவுவதாக அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஏரியன் ரோஸன்பெர்க் கூறுகிறார்.

நகரங்களை நிறுவ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். 40 ஆயிரம் மண்ணின் மைந்தர்களான அரபுக்களை வேறு இடத்திற்கு மாற்றவும், 40 கிராமங்களை தரைமட்டமாக்கி நஜீவில் 70 ஆயிரம் ஹெக்டர் நிலத்தை கைப்பற்றவும் கடந்த ஜனவரி மாதம் சட்டவிரோத இஸ்ரேல் அரசு தீர்மானித்தது.

இது தொடர்பான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியில் நெதன்யாகு அரசு ஈடுபட்டுள்ளது.

Leave a Reply

Top