You are here
Home > Uncategorized > உலகக் கோப்பை கிரிக்கெட் – அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்

உலகக் கோப்பை கிரிக்கெட் – அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்

மிர்பூர்:உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது பாகிஸ்தான்.

முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 43.3 ஓவர்களில் 112 ரன்களுக்கு  அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 20.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 113 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

டாஸ் வென்று  முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற அந்த அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் தரப்பில் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளையும்,  ஹபீஸ், அஜமல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

113 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 113 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஹபீஸ் 10பவுண்டரிகளுடன் 61 ரன்களும், அக்மல் 7 பவுண்டரிகளுடன் 47 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கடந்த உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில் இறங்கியபோதும், சிறப்பாக ஆடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அகமதாபாத்தில் நாளை(மார்ச்-24) ஆஸ்திரேலியா-இந்தியா அணிகளுக்கிடையே நடைபெறும் காலிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் அரையிறுதியில் பாகிஸ்தான் மோதவுள்ளது.

Leave a Reply

Top