You are here
Home > Uncategorized > உலகக்கோப்பை காலிறுதியில் இன்று பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் மோதல்

உலகக்கோப்பை காலிறுதியில் இன்று பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் மோதல்

மிர்புர்:உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் முதல் காலிறுதியில், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. ‘நாக் அவுட்’ முறையில் இப்போட்டி நடைபெறுகிறது.

ஆகவே இதில், வெற்றி பெறும் அணி மட்டுமே அரை இறுதிக்கு தகுதி பெறும்.

இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இவ்விரு அணிகளுமே கணிக்க முடியாத அணிகளாகவே கருதப்படுகின்றன.

பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதோடு, 10 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. சூதாட்டம், அணித் தேர்வில் குளறுபடி என பல்வேறு சர்சைகளுக்குப் பின் விளையாட வந்தாலும் இதுவரை நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் நீங்கலாக மற்ற அனைத்திலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.
 
உலக கோப்பை அரங்கில், வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் அணிகள் ஒன்பதாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய எட்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் 6, பாகிஸ்தான் 2 வெற்றி கண்டன. கடைசியாக கடந்த 2007ல் கரீபிய மண்ணில் நடந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானை வீழ்த்தியது.

Leave a Reply

Top