You are here
Home > Uncategorized > ஈரான்:சர்வதேச அணுசக்தி ஏஜன்சி குழுவினர் அணுமின் நிலையங்களை பார்வையிடமாட்டார்கள்

ஈரான்:சர்வதேச அணுசக்தி ஏஜன்சி குழுவினர் அணுமின் நிலையங்களை பார்வையிடமாட்டார்கள்

டெஹ்ரான்: அணுசக்தி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஈரானுக்கு வருகை தந்துள்ள சர்வதேச அணு சக்தி ஏஜன்சியின் குழுவினர் அணுசக்தி நிலையங்களை பரிசோதனை செய்யமாட்டார்கள் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மட்டுமே ஐ.எ.இ.எ குழுவினர் நடத்துவார்கள் என்று ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து மேற்கத்திய நாடுகள் தங்களது கவலையை வெளியிட்டுள்ள சூழலில் இரண்டு தினங்கள் சுற்றுப் பயணமாக திங்கள் கிழமை ஐ.எ.இ.எ குழுவினர் டெஹ்ரானுக்கு வருகை தந்தனர். ஐ.நா குழுவினரை பரிசோதகர் பட்டியலில் சேர்க்க முடியாது என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரமீன் மெஹ்மான் பரஸ்த் கூறியுள்ளார்.

அணுசக்தி ஏஜன்சி குழுவினருடன் ஈரானின் ஒத்துழைப்பு மிகச்சிறந்த முறையில் தற்போது இருப்பதாக பரஸ்த் கூறியுள்ளார்.

இதனிடையே, தங்களின் அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை தேவையற்றது என்றாலும், நெருக்கடியை தவிர்க்க இவ்விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஈரான் அறிவித்துள்ளது. புதிய மேற்காசிய போரை உருவாக்கும் அளவுக்கு மாறியுள்ள நெருக்கடியை தவிர்ப்பதே எங்களின் விருப்பம் என்று மெஹ்மான் பெரஸ் கூறியுள்ளார்.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Top