You are here
Home > Uncategorized > ஈரானில் இஸ்லாமிய புரட்சி நினைவு தினம்:டெஹ்ரானில் பிரம்மாண்ட பேரணி!

ஈரானில் இஸ்லாமிய புரட்சி நினைவு தினம்:டெஹ்ரானில் பிரம்மாண்ட பேரணி!

டெஹ்ரான்:இஸ்லாமிய புரட்சியின் 35-வது நினைவு தினத்தையொட்டி ஈரான் முழுவதும் பிரம்மாண்ட பேரணிகள் நடந்தன.ஈரான் தலைநகர் டெஹ்ரானில் லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்ட பிரம்மாண்ட பேரணி நடந்தது.

ஆஸாதி சதுக்கத்தில் பேரணியில் கலந்துகொண்டு அதிபர் ஹஸன் ரூஹானி உரையாற்றினார்.கடந்த ஆகஸ்ட் மாதம் ஈரானின் அதிபராக பதவியேற்ற பிறகு ரூஹானி ஆற்றும் முதல் பொது உரை இதுவாகும்.

அமெரிக்க எதிர்ப்பு பாடலை பாடி ரூஹானி தனது உரையை துவக்கினார்.மேலும் அவர் கூறுகையில்,’வெளிநாட்டு சக்திகள் ஈரானில் தங்களது தலையீட்டை நிறுத்தியதற்கு காரணம் நமது கொள்கையாகும்.அமெரிக்கர்கள் ஈரானை தங்களுக்குரியது என்று கருதினார்கள்.ஈரானின் பாதுகாப்பு காரியங்களிலும் அவர்கள் தலையிட்டார்கள்.இச்சூழல்களையெல்லாம் 1979-ஆம் ஆண்டு நிகழ்ந்த புரட்சி முடிவுக்குக் கொண்டுவந்தது என்று ரூஹானி தெரிவித்தார்.

இதனிடையே, நினைவுத்தினத்தையொட்டி இரண்டு நவீன தொழில்நுட்பத்தில் தயாரான இரண்டு ஏவுகணைகளை ஈரான் பரிசோதித்தது.இதுக்குறித்த தகவலை ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஹுஸைன் தெஹ் ஹான் தெரிவித்தார்.

Leave a Reply

Top