You are here
Home > Uncategorized > ஈரானிடம் அணுகுண்டு தயாரிக்கும் திட்டம் இல்லை: அமெரிக்க உளவு ஏஜன்சிகள்!

ஈரானிடம் அணுகுண்டு தயாரிக்கும் திட்டம் இல்லை: அமெரிக்க உளவு ஏஜன்சிகள்!

வாஷிங்டன்:ஈரான் அணுகுண்டு தயாரிப்பது குறித்து நம்பிக்கைக்குரிய தகவல்கள் ஏதும் அமெரிக்க உளவுத்துறை ஏஜன்சிகளுக்கு கிடைக்கவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தை ஈரான் 2003-ஆம் ஆண்டு கைவிட்டதாகவும், 2007-ஆம் ஆண்டு அமெரிக்க உளவு ஏஜன்சிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஈரான் அணு ஆயுத தயாரிக்கவில்லை என்பது அமெரிக்காவில் 16 உளவு ஏஜன்சிகள் கூறியதாக 2010 ஆம் ஆண்டு தேசிய இண்டலிஜன்ஸ் தகவல்கள் கூறுகின்றன. ஈரான் யுரேனியத்தை செறிவூட்டியுள்ளது என்றும், அணு சக்தி நாடாக மாறுவதற்கான அடிப்படை வசதிகளை தயார் செய்துள்ளதாகவும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய உளவுத்துறை அதிகாரிகளுக்கு பூரண நம்பிக்கை உள்ளது.

ஆனால், இணையான அணுசக்தி வார் ஹெட்டை தயாரிப்பது குறித்து ஈரான் இதுவரை முடிவு எடுக்கவில்லை என்று அமெரிக்க மத்திய உளவுத்துறையும், இதர ஏஜன்சிகளும் கருதுகின்றன என்று நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

மேற்காசியாவில் ஆதிக்கத்தை வலுப்படுத்தவும், இதர நாடுகளில் சந்தேகத்தை உருவாக்கவும், ஈரான் தனது அணுசக்தி சாதனை குறித்து வெளியிட்டது என்று மேற்கத்தியர்கள் கருதுவதாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Top