You are here
Home > Uncategorized > இஸ்ரேலுக்கு ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் கண்டனம்!

இஸ்ரேலுக்கு ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் கண்டனம்!

டெல் அவிவ்: ஃபலஸ்தீன் மக்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் மார்டின் ஷூல்ஸ் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

யூதர்கள் ஆக்கிரமித்த பகுதியில் உள்நாட்டு மக்களான ஃபலஸ்தீனர்களுக்கு தண்ணீரை தடை செய்த இஸ்ரேல் அரசின் நடவடிக்கையை ஷூல்ஸ் சுட்டிக்காட்டினார். காஸாவுக்கு எதிராக தடை ஏற்படுத்திய தடையை ஷூல்ஸ் கண்டித்தார். ஃபலஸ்தீன் மக்களுக்கு ஒரு நாளைக்கு 17 லிட்டர் நீரை மட்டுமே இஸ்ரேல்
வழங்குகிறது. ஆனால், இஸ்ரேல் குடிமக்களுக்கு 70 கியூபிக் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஃபலஸ்தீன் இளைஞர் ஒருவர் தனக்கு இத்தகவலை தெரிவித்தார் என்று ஷூல்ஸ் தெரிவித்தார்.

ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன் பகுதிகளில் சட்டவிரோதமாக யூத குடியிருப்புகளை கட்டுவதையும் ஷூல்ஸ் விமர்சித்தார். ஷூல்ஸின் உரையை கண்டித்து சில உறுப்பினர்கள் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் வெளிநடப்புச் செய்தனர். இஸ்ரேல் அரசின் இமேஜை கெடுப்பதற்கான முயற்சி என்று ஷூல்ஸின் உரைக்கு பின்னர் உரையாற்றிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Top