You are here
Home > Uncategorized > இஸ்ரேலின் ஆயுதங்கள் ஃபலஸ்தீனர்களின் கைவினைப் பொருட்கள்!

இஸ்ரேலின் ஆயுதங்கள் ஃபலஸ்தீனர்களின் கைவினைப் பொருட்கள்!

ராமல்லா: தோட்டா உறைகள், ஸ்டன் குண்டுகள் (நினைவாற்றலை அழிக்கும் குண்டுகள்), ரப்பர் குண்டுகள், முள் வேலிகள் ஆகியன ஃபலஸ்தீனில் பிரிவினை சுவருக்கு எதிராக போராடும் ஃபலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் பிரயோகிக்கும் ஆயுதங்களாகும்.

ஆனால், அதே ஆயுதங்களை பயன்படுத்தி கலைப்பொருட்களை உருவாக்கி ஆக்கிரமிப்பிற்கு எதிராக சில ஃபலஸ்தீன் கலைஞர்கள் போராடுகின்றார்கள். எதிர்ப்பு போராட்டம், கலை ஆகியவற்றின் நீதியின் அடிப்படையிலான கலவையே தனது கலை என்று ஃபலஸ்தீன் கலைஞர் முஹம்மது அல் காத்திப் கூறுகிறார்.

இஸ்ரேல் உபயோகித்த தோட்டா உறைகள், ஸ்டன் குண்டுகள், ரப்பர் புல்லட்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கலைப்பொருட்களின் கண்காட்சியை காத்திபும் அவரது சக கலைஞரான ஸமி மூஸாவும் நடத்துகிறார்கள்.

3 நாட்கள் நடந்த இக்கண்காட்சியில் முள் வேலிகள், கண்ணீர் குண்டுகளில் இருந்து தப்ப உதவும் முகமூடிகள், மேற்கு கரையில் பிரிவினை சுவருக்கு பயன்படுத்திய கற்களும் உண்டு.

ராமல்லாவில் மஹ்மூத் தர்வீஸ் அருங்காட்சியகத்தில் நடந்த கண்காட்சியில் மக்கள் பிரதிநிதிகள், போராளிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அடக்குமுறைகளும், கொலைகளும் நடக்கும்போதும் ஃபலஸ்தீன் மக்கள் தங்களுக்கு எதிராக பிரயோகிக்கும் ஆயுதங்களை நம்பிக்கை மற்றும் வாழ்க்கையின் அடையாளங்களாக மாற்றுகின்றார்கள். ஆகையால் இக்கண்காட்சி நம்பிக்கைக்கான செய்தியை அளிப்பதாக அல் காத்திப்  கூறுகிறார்.

Leave a Reply

Top