You are here
Home > இஸ்லாம் > இரும்பு ஓர் உதாரணம்!

இரும்பு ஓர் உதாரணம்!

இரும்பு என்றால் அது மிகவும் வலிமையானது, உறுதியானது என்று அறிவோம். வலிமையான உடல்களை கொண்ட நபர்களை இரும்பு மனிதன் என்று உதாரணம் கூறுவார்கள். ஆனால் அந்த இரும்பு எப்படி உருவாக்கப்பட்டது என்று யாரும் அறிந்ததில்லை.

இரும்பு என்பது அல்லாஹ்வினால் படைக்கப்பட்டதும் அவனால் இந்த பூமிக்கு அனுப்பட்டதும் என்று கீழ்க்காணும் வசனம் உணர்த்துகிறது:

நாம் நம்முடைய தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டே அனுப்பி வைத்தோம். அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும் கொடுத்தோம். மனிதர்கள் நீதமாக நடந்துகொள்ளும் பொருட்டு தராசையும் கொடுத்தோம். இரும்பையும் நாமே படைத்தோம். நாமே இறக்கினோம். அதில் பெரும் சக்தி இருக்கின்றது. இன்னும் மனிதர்களுக்கு பல பயன்களும் உள்ளன. அல்லாஹ்வைக் (கண்ணால்) காணாமலேயே (அவனை நம்பிக்கை கொண்டு) இதன் மூலம் அவனுக்கும், அவனுடைய தூதருக்கும் உதவி செய்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் (சோதித்து) அறிந்துகொள்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் பலசாலியும் (அனைவரையும்) மிகைத்தவனுமாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 57:25)

இரும்பை யாராலும் உருவாக்க முடியாது. அது அல்லாஹ்வினால் படைக்கப்பட்டது. இரும்பு பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இன்னும் பல இடங்களில் பழைய இரும்பை மறுசுழற்சி முறை மூலம் மீண்டும் பயன்படுத்துகிறார்கள்.

இத்தகைய இரும்பையே நாம் அனைவரும் பயன்படுத்துகிறோம்.  இரும்பின் மூலப்பொருள் Fe. கண்ணாடி என்பது மண்ணினால் செய்யப்பட்டது. இந்தக் கண்ணாடியை செய்ய மண்ணை 1500 – 2500 டிகிரி வெப்பத்தில் சூடாக்க வேண்டும். அப்போழுதுதான் கண்ணாடியை உருவாக்க முடியும்.

ஆனால் இரும்பைச் செய்ய இதை விட அதிகம் வெப்பம் தேவை. அது சூரிய வெப்பத்திற்கு சமம். அது மனிதனால் முடியாத ஒன்று. ஆகையால்தான் அல்லாஹ் தன்னுடைய புத்தகத்தில் இரும்பை நாம் இறக்கினோம் என்று கூறினான்.

மனிதனின் தேவைக்காக அல்லாஹ் எல்லாவற்றையும் தருகிறான். ஆனால் நாம் அல்லாஹ்வுக்கு பிடித்தமான முறையில் நடக்கிறோமா?

ஆரூர் யூசுஃப்தீன்

Leave a Reply

Top