You are here
Home > Uncategorized > உலகம் > இருநாடுகளுக்கும் இடையே நடக்கும் “அறிவிக்கப்படாத போர்” முடிவுக்கு வர வேண்டும்!

இருநாடுகளுக்கும் இடையே நடக்கும் “அறிவிக்கப்படாத போர்” முடிவுக்கு வர வேண்டும்!

வன்முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றும், பாக்கிஸ்தான் ஆப்கானிய அரசாங்கத்திற்கும் தலிபனுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்த முன்வர வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி கூறியுள்ளார். மேலும் இது குறித்து விளக்கமளித்த கானி “ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான அறிவிக்கப்படாத போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் முடிவுக்கு வர வேண்டும்” என்று காபூலில் நடைபெற்ற நிகழ்வில் பேசியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் எந்தவொரு இயக்கத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. பாகிஸ்தான் நாடு மீது நடைபெறும் தாக்குதலுக்கு ஆப்கானிய மண் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Top