You are here
Home > Uncategorized > இன்று பெருமை மிக்க நாள் : ஆனந்தக் கண்ணீர் விட்ட சச்சின்

இன்று பெருமை மிக்க நாள் : ஆனந்தக் கண்ணீர் விட்ட சச்சின்

இந்தியா கோப்பையை வென்ற நாள் என் வாழ்வின் பெருமை மிக்க நாள் என சச்சின் உணர்ச்சி பொங்கக் கூறினர்.

மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இந்தியா வெற்றி பெற்றதும் சச்சினை சகவீரர் யூசுப் பதான் தனது தோளில் தூக்கி வைத்து மைதானத்தில் வலம் வந்தார். அப்போது சச்சினின் கண்களில் இருந்து கண்ணீர் வெளிப்பட்டது. அதுகுறித்து அவரிடம் கேட்டபோது, அது ஆனந்தக் கண்ணீர். நாங்கள் எல்லோரும் உற்சாகத்தில் மேலும், கீழும் குதித்தபோது மெய்மறந்துவிட்டேன்.

குறிப்பாக சாகச நிபுணர் மைக் ஹார்னுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மற்றும் பேடி அப்டன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியதற்கு கிடைத்த வெற்றி இது என்றார்.

Leave a Reply

Top