You are here
Home > Uncategorized > இந்திய ஜனநாயகத்தின் மீதான கரும்புள்ளி – மீரா குமார்!

இந்திய ஜனநாயகத்தின் மீதான கரும்புள்ளி – மீரா குமார்!

புதுடெல்லி:மக்களவையில் வன்முறையில் ஈடுபட்ட சில உறுப்பினர்களின்செயல்பாடு, சர்வதேச அளவில் போற்றப்படும் இந்திய ஜனநாயகத்தின் மீதுவிழுந்த கரும்புள்ளி’ என்று மக்களவைத் தலைவர் மீரா குமார் வேதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”உலகின் பார்வையில் இந்திய ஜனநாயகத்துக்குத் தலைகுனிவை இச் சம்பவம்ஏற்படுத்தி விட்டது. இந்திய ஜனநாயகத்தை உலகமே வியந்து போற்றுகிறது.

அப்படிப்பட்ட நாட்டில் நடைபெற்றுள்ள இச் சம்பவம், நமது ஜனநாயகத்தின் மீதுவிழுந்த கரும்புள்ளியாகும்.மக்களவையில் மிகவும் மோசமான வகையில் செயல்படும் உறுப்பினர்கள் மீது எத்தகைய கடுமையான நடவடிக்கையை எடுக்கலாம் என்பது குறித்து அனைத்துக கட்சித் தலைவர்களுடனும் விவாதிப்பேன். வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் உறுப்பினர்களின் போக்கை ஒருபோதும் அனுமதிக்க முடியாது’என்றார்.

 


Leave a Reply

Top