You are here
Home > Uncategorized > இந்தியாவை ஆள வேண்டியது யார்?

இந்தியாவை ஆள வேண்டியது யார்?

இன்று இந்தியா முழுவதும் மீடியாக்கள் பிரபலப்படுத்தும் நபராக நரேந்திர மோடி உலா வருகிறார். வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் எப்படியாவது நாம் பிரதமராக வேண்டும் என்கிற கனவில் தன்னையே ஒரு ஹீரோவாக உருவாக்கி தன்னை தயார் படுத்தி வருகிறார்.

தன்னை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக பல கோடி ரூபாய்களை மீடியாக்களுக்கு தாரை வார்த்தும் கொடுத்துள்ளார். தன்னுடைய மாநிலம் குஜராத் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் என்பது போன்ற மாயையை ஏற்படுத்தி வருகிறார். ஏதோ நாட்டிற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் போல பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார். உலகிலேயே மருத்துவம் இல்லாமல் இறக்கும் குழந்தைகள் குஜராத்தில்தான் அதிகம் என்ற நிலையை மற்றவர்கள் மறக்க வேண்டும் என்பதற்காக போலியான பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கு இரண்டு காரணங்கள். காரணம் 1: காங்கிரசின் கையாலாகாத தனம். 2: மீடியாக்களின் போலியான பிரச்சாரம்.

யார் தலைவர்?

ஒரு தலைவர் என்பவர் தனது ஆளுகையின் கீழ் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் பாரபட்சமில்லாமல் நடத்த வேண்டும். அந்த வகையில் பார்த்தால் மோடி ஒரு ஹீரோ அல்ல, அவர் ஒரு ஜீரோ என்பது அனைவருக்கும் தெரியும்..தன்னுடைய சுயநலத்துக்காக, பதவி வெறிக்காக, தான் ஏற்றுக்கொண்ட ஃபாசிசக் கொள்கைக்காக தனது ஆளுகையில் கீழ் உள்ள சிறுபான்மையினரான முஸ்லிம்களைக் கொன்று, அவர்களின் பெண்களின் கற்புகளைச் சூறையாடி, அவர்களின் பொருட்களை, சொத்துக்களைச் சூறையாடி அதன் மூலம் ஓர் இனப்படுகொலையை நடத்தி முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களை திசை திருப்பி அதன் மூலம் அவர்களின் ஓட்டு வங்கியைத் தக்க வைக்கலாம் என்கிற சிறு புத்திக்கு சொந்தக்காரர்தான் இந்த மோடி.

அப்பாவி விவசாயிகளின் வயல் நிலங்களைப் பிடுங்கி அதை முதலாளி வர்க்கத்துக்கு தாரை வார்த்து விவசாயிகளின் வயிற்றில் அடித்து அவர்களை தற்கொலை செய்ய வைத்து அவர்களின் குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து மீறி யாராவது போராட்டம் நடத்தினால் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அதன் மூலம் குஜராத் ஒளிர்கிறது என்கிற மாயையை உருவாக்கி வருகிறார் மோடி. தன் தலைவராக இருந்த அத்வானியையே தனது சுயநலத்துக்காக கீழே இறக்கி பல மூத்த தலைவர்களின் வசைமொழியை வாங்கியவர்தான் இந்த மோடி. ஊழலிலும், பலான படங்களிலும் திளைத்து, தீவிரவாதத்திலும், குண்டுவெடிப்புகளிலும் ஈடுபட்டு அதன் மூலம் ஒட்டு மொத்த இமேஜையும் கெடுத்து வைத்திருக்கும் பா.ஜ.க. பரிவாரங்களைக் காப்பாற்ற புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் இந்த மோடி.

உண்மைத் தலைவர் யார்?

இரண்டாம் கலீஃபா ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் இரவு நேரங்களில் மாறுவேடத்தில் உலா வருவது அவர்களது வழக்கம். ஒரு தடவை அப்படி உலா வரும்பொழுது ஒரு வீட்டருகில் கேட்ட உரையாடல். அவர்கள் பால் விற்பனையாளர்கள். தாய் தன் மகளிடம்: பாலில் இன்னும் கொஞ்சம் தண்ணீரை ஊற்று…மகள்: வேண்டாம். பாலுக்கு இவ்வளவுதான் தன்ணீரை ஊற்ற வேண்டும் எனக் கலீஃபா உத்தரவு போட்டு இருக்கிறார்கள்.தாய்: இது கலீஃபாவுக்குத் தெரியவா போகிறது? மகள்: இது கலீஃபாவுக்குத் தெரியாவிட்டாலும் நம்மைப் பார்த்துக்கொண்டு இருக்கிற இறைவனுக்கு தெரியுமல்லவா?இதைச் செவி மடுத்த ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் அந்தப் பெண்ணுக்கு தன்னுடைய மகனையே திருமணம் நடத்தி வைத்தார்கள். தனது ஆளுகையின் கீழ் ஒரு ஆடு திருடப்பட்டாலும் அதற்காக தான் இறைவனிடம் நாளை பதில் சொல்ல வேண்டியிருக்கும் எனப் பயப்பட்டார்கள்.

அந்தக் கலீஃபாவுக்கு எதிராக யூதன் ஒருவன் வழக்கு ஒன்றைத் தொடுத்தான். விசாரணை நீதிமன்றம் வந்தது. குற்றவாளிக் கூண்டில் நின்ற கலீஃபா அவர்களைப் பார்த்த நீதிபதி சற்றே மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றார். கலீஃபாவின் கண்கள் கோபத்தால் சிவந்து விட்டன. உடனே அவர் நானோ இன்று குற்றவாளிக் கூண்டில் நிற்கிற ஒரு விசாரணைக் கைதி. எனக்கு நீங்கள் கொடுக்கும் இந்த மரியாதையைப் பார்த்தால் இந்த விசாரணையை நீங்கள் சரியாக நடத்துவீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. விசாரணை என்றால் அனைவரும் ஒன்றுதான் எனக் கண்டித்தார்கள்.

இத்தகைய நல்லாட்சியைத் தந்ததால்தான் மகாத்மா காந்தி கூறினார்: “உமருடைய ஆட்சி இந்தியாவுக்கு வர வேண்டும்.”

இப்பொழுது கூறுங்கள் இந்தியாவுக்கு எவரது ஆட்சி வேண்டும்? நாசம் மிக்க மோடியின் ஆட்சியா? நீதி மிக்க உமரின் ஆட்சியா?

இந்தியா முழுவதும் வெடிகுண்டுக் கலாச்சாரத்தைப் பரப்புபவர்கள் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் என்று தெரிந்தும் இந்திய காவல் துறையும், மீடியாவும் இவற்றிற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாதர்வர்களான முஸ்லிம்களைக் கைது செய்து சிறையில் அடைத்து அவர்களின் குடும்ப வாழ்க்கையையே கேள்விக்குரியதாக ஆக்கி விடுகிரார்கள் என்றால் இந்தியா எங்கே சென்று கொண்டு இருக்கிறது?

வேண்டும் உண்மையாளர்கள்

எனவே இறைவனுக்குப் பயந்து ஆட்சி செய்யும் ஒரு கூட்டம் அரியணைக்கு வர வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்து நடக்கும் ஒரு கூட்டம் உருவாக வேண்டும். அது நிச்சயமாக முஸ்லிம்களால் மட்டும்தான் முடியும். ஏனெனில் 800 ஆண்டு கால வரலாறு அவர்களுக்கு உள்ளது. சிராஜுத் தவ்லா முதல் இன்று வரை அனைத்து முஸ்லிம்களும் இந்திய சுதந்திரத்துக்காக தங்களுடைய உயிரையும், பொருளையும் தியாகம் செய்துதான் இன்றைய சுதந்திர இந்தியாவை உருவாக்கி இருக்கிறார்கள்.

எனவே முஸ்லிம்களின் கரங்களை வலுப்படுத்தி ஃபாசிச பயங்கரவாத பரிவாரக் கும்பல்களின் பிடியிலிருந்தும், ஊழல் பெருச்சாளிகளான காங்கிரசின் பிடியிலிருந்தும் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை.

கீழை ஃபைஸல்

Leave a Reply

Top