You are here
Home > Uncategorized > இந்தியாவுக்கு பெருமை சேர்த்து தந்த பெண்ணை அலைக்கழிக்கும் அரசு!

இந்தியாவுக்கு பெருமை சேர்த்து தந்த பெண்ணை அலைக்கழிக்கும் அரசு!

ராஞ்சி: கடந்த 2012-ம் ஆண்டு நடந்த பெண்கள் உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது. வெற்றி பெற்று இந்தியா திரும்பிய இந்திய அணி வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த அணியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை விந்தியாவாசினியும் இடம் பெற்றிருந்தார்.

பின்னர் தனது சொந்த மாநிலத்திற்கு வந்த விந்தியாவாசினிக்கு அப்போது முதல்வராக இருந்த அர்ஜூன் முண்டாவின் அரசு வேலை தருவதாக உறுதியளித்தது. ஆனால் அந்த ஆட்சி முடிவு பெற்றது. அதையடுத்து ஆட்சிக்கு வந்த ஹேமந்த் சோரனும் இரண்டு முறை வேலை கொடுப்பதாக விந்தியாவாசினிக்கு உறுதியளித்தார்.

ஆனால், அவர்களின் வாக்குறுதிக்கு ஏற்ப வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்த விந்தியாவாசினி ஏமாற்றம் அடைந்தார். நான்கு சகோதரிகளுடன் வாழ்ந்த அவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடி வருகிறது. இதையடுத்து இந்தியாவிற்கு பெருமை அந்த வீராங்கனை நேற்று வேலை கேட்டு பொகாரோ துணை கமிஷனர் அலுவலகம் முன்பு ஒரு நாள் தர்ணா நடத்தினார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க எந்த அரசு அதிகாரியும் முன்வரவில்லை.

போராட்டத்தில் ஈடுபட்ட விந்தியாவாசினி கருத்து வெளியிடுகையில், சர்வதேச விளையாட்டுகளில் வெற்றி பெறுபவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அரசின் கொள்கை இருக்கிறது. ஆனால், இவர்கள் எனக்கு வேலை தர மறுத்து வருகிறார்கள். அவர்கள் கொடுத்த வாக்குறுதியை இன்னும் 10 நாட்களில் நிறைவேற்றாவிட்டால், எனது குடும்பத்துடன் தலைநகர் ராஞ்சியில் போராட்டம் நடத்துவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Top