You are here
Home > Uncategorized > இந்தியர்கள் கிரிக்கெட்டையும், வீரர்களையும் நேசிக்கின்றனர்: காலிஸ்

இந்தியர்கள் கிரிக்கெட்டையும், வீரர்களையும் நேசிக்கின்றனர்: காலிஸ்

தென் ஆப்பிரிக்க அணியின் சகல துறை ஆட்டக்காரர் ஜேக் காலிஸ். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வு பெற்றார்.

38 வயதான அவர் 166 டெஸ்டில் விளையாடி 13,289 ஓட்டங்களை எடுத்துள்ளார். சராசரி 55.37 ஆகும். 45 சதமும், 58 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்ச ஓட்டம் 229 ஆகும். 38 வயதான காலிஸ் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஒவர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு காலிஸ் கருத்து வெளியிட்டார். அவர் குறிப்பிட்டதாவது:

டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதால் நான் தற்போது சுதந்திரமாக இருக்கிறேன். டெஸ்ட் போட்டியில் இருந்து மாறுபட்டது ஒருநாள் போட்டி. இனி ஒருநாள் போட்டியில் எனது திறமையை அதிகரித்து கொள்ள முடியும். எனது கடைசி டெஸ்டில் சதம் அடித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்திய மண்ணில் விளையாடுவது எனக்கு பிடித்த ஒன்றாகும். இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் விளையாட்டையும், வீரர்களையும் மிகவும் நேசிக்கிறார்கள். இதனால்தான் இந்திய வீரர்கள் சொந்த மண்ணில் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார்கள்.

நான் சந்தித்த பந்துவீச்சாளர்களில் வேகப்பந்தில் வாசிம் அக்ரமும், சுழற்பந்தில் ஷேன் வோர்னும் சவாலானவர்கள். இருவரும் தங்களுக்கு ஏற்ற ஆடுகளத்தில் மிகவும் சிறப்பாக பந்துவீசக் கூடியவர்கள்.

இவ்வாறு அவர் கருத்து தெரிவித்தார்.

Leave a Reply

Top