You are here
Home > Uncategorized > இத்தாலி பாதுகாப்பு அமைச்சர் இந்தியா வருகை!

இத்தாலி பாதுகாப்பு அமைச்சர் இந்தியா வருகை!

இத்தாலி கடற்படை வீரர்களுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அந்நாட்டுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் மரியோ கௌரோ இந்தியா வந்துள்ளார்.

கொல்லம் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக இத்தாலி கடற்படை வீரர்கள் மஸிமிலியானோ லாட்டோர் மற்றும் சால்வடோர் கிரோன் மீது கடற்கொள்ளையர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு படை குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் இத்தாலி அரசு தொடர்ந்துள்ள வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து மத்திய அரசின் கருத்துகளை கேட்டறிந்து தெரிவிக்கும்படி அட்டார்னி ஜெனரலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்றால், உச்ச நீதிமன்றமே முடிவு செய்யும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வழக்கு மீதான அடுத்த விசாரணையை, 18ஆம் திகதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணையில் கவனம் செலுத்துவதற்காக இத்தாலி பாதுகாப்புத் துறை அமைச்சர் மரியோ கௌரோ நேற்று டெல்லிக்கு வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கடற்படை வீரர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் எம்மா பொனினோ கருத்து வெளியிடுகையில்,கடற்கொள்ளையர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுபதிவு செய்யப்பட்டதை இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால், இந்த விவகாரத்தில் ஐ.நா.விடம் இத்தாலி நாடு முறையிடும்’ என்று கூறினார்.

Leave a Reply

Top