You are here
Home > Uncategorized > ஆரோக்கியமான மக்கள்! வலிமையான தேசம்! – பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மராத்தான் ஓட்டம்

ஆரோக்கியமான மக்கள்! வலிமையான தேசம்! – பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மராத்தான் ஓட்டம்

புதுடெல்லி: “ஆரோக்கியமான மக்கள்! வலிமையான தேசம்!” (Healthy People Healthy Nation) என்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் நடத்தி வரும் தேசம் தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக  நேற்று (01/11/2013) டெல்லியில் மராத்தான் ஓட்டம் நடந்தது.

ஜந்தர் மந்தரில் டெல்லி மாநில செயலாளர் முஹம்மது தல்ஹா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மராத்தான் ஓட்டத்தை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உறுப்பினர் உஸ்மான் பேக் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அசோகா சாலை வழியாக பல்வேறு பகுதிகள் ஊடே மராத்தான் ஓட்டம் ஜந்தர் மந்தரில் முடிவடைந்தது. அப்துல் ரஹ்மான் யோகா வகுப்பை நடத்தினார். பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உறுப்பினர் முஹம்மது இஸ்மாஈல், மாநிலத் தலைவர் அன்ஸாருல் ஹக், துணைத் தலைவர் இர்ஃபான் அஹ்மத், துணைச் செயலாளர் அஃப்தாப் ஃபாஸில், பொருளாளர் குல்ஃபாம் ஹுஸைன் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Top