You are here
Home > Uncategorized > ஆப்கான் ராணுவத்திடம் ஒப்படைக்கவிருக்கும் நேட்டோ கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களின் பட்டியலை கர்ஸாயி வெளியிட்டார்

ஆப்கான் ராணுவத்திடம் ஒப்படைக்கவிருக்கும் நேட்டோ கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களின் பட்டியலை கர்ஸாயி வெளியிட்டார்

காபூல்:அமெரிக்கா தலைமையிலான அந்நிய ஆக்கிரமிப்பு ராணுவம் வருகிற ஜூலை மாதம் ஆப்கான் ராணுவத்திடம் ஒப்படைக்கவிருக்கும் 7 பிரதேசங்களின் பட்டியலை அந்நாட்டு அதிபர் ஹமீது கர்ஸாயி வெளியிட்டார்.

ஒப்பு நோக்குகையில் அமைதி தவழும் காபூல், பான்ஜஸீர், பாமியான், ஹெரத் நகரங்கள், மஷாரே ஷெரீஃப், மெஹ்தர்லாம், ஹெல்மந்த் மாகாணம் தலைநகரான லஷ்கர் காஹ் ஆகிய இடங்களின் கட்டுப்பாட்டு ஒப்படைக்கப்படும்.

2014-ஆம் ஆண்டு அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் ஆப்கானிலிருந்து முழுமையாக வெளியேறுவதற்கான முதல் கட்டம் இது என கருதப்படுகிறது.

நாட்டின் பாதுகாப்பிற்கான பொறுப்பை அந்நிய ராணுவத்திற்கு சிறிது நேரம் கூட அளிக்கக் கூடாது என்பது ஆப்கான் மக்களின் விருப்பமாகும் என தேசிய ராணுவ அகாடமியில் உரை நிகழ்த்தும்போது கர்ஸாயி தெரிவித்தார்.

இவ்விடங்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான் பொறுப்பு உள்நாட்டு ராணுவத்திற்காகும். தலைநகர் உள்பட காபூலின் எல்லா நகரங்களின் பொறுப்பையும் ஆப்கான் ராணுவம் ஏற்றுக்கொள்ளும். ஆனால், கூடுதல் தாக்குதல் நடப்பதற்கு வாய்ப்புள்ள ஸரோபி மாவட்டம் அந்நிய ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும்.

பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது ஆப்கான் கிராமங்களில் அல்ல மாறாக போராளிகளின் செல்வாக்கு மிக்க பகுதிகளிலாகும் என கர்ஸாயி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Top