You are here
Home > Uncategorized > ஆப்கானில் படை வாபஸ்:அமெரிக்காவின் அடுத்த குறி பாகிஸ்தான்?

ஆப்கானில் படை வாபஸ்:அமெரிக்காவின் அடுத்த குறி பாகிஸ்தான்?

இஸ்லாமாபாத்:ஆப்கானில் நிறுத்தப்பட்டிருக்கும் படையினரை 2014-ஆம் ஆண்டு இறுதியில் முற்றிலுமாக வாபஸ் பெறுவோம் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் அறிவிப்பால் பாக்.மண்ணில் அமெரிக்க படையை அனுப்புவது துரிதப்படுத்தப்படும்.

அல்காயிதா தலைவர் உஸாமா பின் லாடினை பாகிஸ்தானின் அப்போட்டாபாத்தில் வைத்து கொலை செய்ததாக கூறும் அமெரிக்கா, பாகிஸ்தானின் மீது நிர்பந்தம் அளிக்க இயலும் என கருதுகிறது. மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதல் நடத்த அல்காயிதா உள்ளிட்ட அமைப்புகள் திட்டமிடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள ஹிலாரி க்ளிண்டன் பாகிஸ்தானிடம் வலியுறுத்தியது ஒபாமாவின் ஆப்கான் படை வாபஸ் அறிவிப்பிற்கு பிறகாகும். அமெரிக்கர்களை கொலை செய்ய முயல்பவர்களை அமைதியாக வாழ அனுமதிக்கமாட்டோம் என ஒபாமா அறிவித்திருந்தார்.

இதற்கிடையே அமெரிக்க ராணுவ தலைமை தளபதி மைக் முல்லனும் அல்காயிதாவை கடுமையாக விமர்சித்துள்ளார். மும்பை உள்ளிட்ட தாக்குதல்களை நடத்திய அல்காயிதா தற்பொழுது மேற்கத்திய நாடுகள் மீது கவனத்தை திருப்பியுள்ளதாகவும் அதனால் ஆப்கான், பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் மீது தங்களது கவனம் பதிந்துள்ளதாக கூறியுள்ளார்.

ஆப்கானை ஒட்டிய பாக்.பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அநீதமாக ஆளில்லா விமானத்தாக்குதலை நடத்தும் அமெரிக்கா, ஆப்கானில் நேட்டோ படையினர் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானிலிருந்து அல்காயிதா போராளிகள் வருகின்றார்கள் என நியாயம் கற்பிக்க முயல்கிறது.

Leave a Reply

Top