You are here
Home > Uncategorized > ஆட்சியில் பங்கு பறிபோனதில் அதிருப்தி:பீகார் பா.ஜ.கவில் உட்கட்சி குழப்பம்!

ஆட்சியில் பங்கு பறிபோனதில் அதிருப்தி:பீகார் பா.ஜ.கவில் உட்கட்சி குழப்பம்!

பாட்னா:பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமார் தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து வாபஸ் பெற்றதை தொடர்ந்து பா.ஜ.கவில் உட்கட்சி பூசல் துவங்கியுள்ளது. மாநில சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவராக நந்த் கிஷோர் யாதவை, எம்.எல்.ஏக்களுடன் கலந்தாலோசிக்காமல் தேர்வுச் செய்ததுக் குறித்து கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பா.ஜ.கவின் பாராளுமன்ற போர்ட், மாநில எதிர்கட்சி தலைவராக யாதவை தேர்வுச் செய்ய தீர்மானித்தது. இதனை கண்டித்து பா.ஜ.கவின் எம்.எல்.ஏக்களில் ஒருபிரிவினர் நேற்று நடந்த சட்டப்பேரவை கட்சிக் கூட்டத்தை புறக்கணித்தனர். எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்த தகவலை நிதீஷ் குமார் அரசில் நகர வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்களின் எதிர்ப்பை பீகாருக்கு பொறுப்பு வகிக்கும் மேலிட பா.ஜ.க தலைவர்களான ஆனந்தகுமார் மற்றும் தர்மேந்திரா பிரதான் ஆகியோருக்கு தெரிவித்திருப்பதாக பிரம்குமார் கூறுகிறார். எம்.எல்.ஏக்களின் கருத்தை ஆராயமல், சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரை தேர்வுச் செய்த பிறகு சட்டப்பேரவை கட்சிக் கூட்டத்தை கூட்டுவதில் அர்த்தமில்லை என்று இன்னொரு அமைச்சராக பதவி வகித்த சந்திரமோகன் ராய் கூறுகிறார்.

முதல்வர் நிதீஷ்குமாருடன் நெருக்கமான யாதவை எதிர்கட்சி தலைவராக தேர்வுச் செய்த நடவடிக்கைக் குறித்து பா.ஜ.கவின் மூத்த எம்.எல்.ஏவான பிரேம்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். செவ்வாய்க்கிழமை பீகாரில் நடந்த முழு அடைப்பில் சந்தைகள் மூடியபோதும் யாதவின் வியாபார ஸ்தாபனங்கள் திறந்திருந்ததாக பிரேம்குமார் குற்றம்சாட்டுகிறார்.

Leave a Reply

Top