You are here
Home > Uncategorized > ஆடையும் நடத்தையும்!

ஆடையும் நடத்தையும்!

யூனிஃபார்ம் அணிவது நடத்தையிலும், உடல்ரீதியான ஆளுமையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், யூனிஃபார்ம் என்ன கலரில் அமையவேண்டும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.

சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் காக்கி உடையை அணியும் போது ஏற்படும் மனோநிலை ஒரு பஸ் டிரைவர் காக்கி உடையை அணியும்பொழுது ஏற்படாது. ஆடை அணிதல் மனிதர்களில் ஏற்படுத்தும் மாற்றங்களை குறித்து தற்பொழுது ஏராளமான ஆய்வுகள் நடந்துவருகின்றன.

வெள்ளை நிறத்திலான ஆப்ரனை அணியும் மருத்துவர்கள் கருத்துக்களை கூடுதல் கவனத்துடன் கேட்பதாக அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டுபிடித்தனர். இந்த ஆராய்ச்சிக்கு தலைமை வகித்த டாக்டர்.ஆடம் காலின்ஸ்கி கூறுவது என்னவெனில், நமது மூளை மட்டுமல்ல, நமது உடலும் சிந்திக்கிறது என்பதாகும்.

நபி(ஸல்) அவர்கள் வெள்ளை ஆடையை விரும்பினார்கள் என்ற செய்தியை அவரது வாழ்க்கை வரலாற்றில் காணமுடிகிறது.

நேர்முக தேர்வுக்கு வரும் நபர் சுத்தமாகவும், அழகாகவும் காட்சி அளிப்பதில் ஆடையும் முக்கிய பங்களிப்பை ஆற்றுகிறது. வெறும் ஒரு டீ சர்ட்டை அணிபவரை விட ஷூட், சர்ட் அணிந்து வருபவர் கூடுதல் அறிவுடையோர் என்று நேர்முகத் தேர்வை நடத்துபவர்கள் கருதுகின்றனர் போலும். இது ஒரு எண்ணமாக அதாவது மனப்பாங்காக இருக்கலாம். ஆனால், அன்றாட வாழ்வில் நிகழும் பல்வேறு சம்பவங்களில் இவ்வாறான எண்ணங்களின் அல்லது மனப்பாங்கின் அடிப்படையிலாகும்.

நாம் அணியும் ஆடை நமது சிந்தனையையும் ஆக்கிரமிக்கிறது. சில ஆடைகள் மோசமானது என்றும், சில ஆடைகள் மிகச் சிறந்ததாகவும்  கருதுவதன் பின்னணியில் நீண்டகாலமாக நடக்கும் பிரச்சாரமும் காராணமாக அமைந்துள்ளன.

ஹிந்தி சினிமாக்களில் மோசமான கதாபாத்திரங்களுக்கு கஷ்மீரி-ஆப்கானிஸ்தான் உடையை அணிவிப்பதை  காணலாம். தீவிரவாத வழக்குகளில் அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்த வரும்வேளையில் அவரது முகத்தை ஃபலஸ்தீன் கஃபயாவை கொண்டு மூடவேண்டும் என்று டெல்லி போலீஸ் அதிகாரிகள் தீர்மானித்திருப்பதும் எதேச்சையானது அல்ல.

Leave a Reply

Top