You are here
Home > Uncategorized > ஆஃப்கான்:கொலைச் செய்தபிறகு இறந்த உடல்களுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்த அமெரிக்க ராணுவத்தினர்

ஆஃப்கான்:கொலைச் செய்தபிறகு இறந்த உடல்களுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்த அமெரிக்க ராணுவத்தினர்

காபூல்:நிராயுதபாணிகளான ஆப்கானிஸ்தானின் அப்பாவி மக்களை கொலைச் செய்துவிட்டு அவர்களின் இறந்த உடல்களுக்கு அருகே நின்று புகைப்படம் எடுத்து ரசிக்கும் அமெரிக்க ராணுவத்தினரின் புகைப்படங்களை ஜெர்மன் பத்திரிகையான டெர் ஸ்பீகல் வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தின் 12 உறுப்பினர்களைக் கொண்ட கொலைக்கார கும்பல் எடுத்த சுமார் 4000 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஞாயிற்றுக்கிழமை இரவு ஆன்லைன் மூலம் டெர் ஸ்பீகல் வெளியிட்டது.

2010 ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி நிராயுதபாணியான குல்முதீன் என்ற அப்பாவியை கொலைச் செய்தபிறகு அவருடைய தலையை அமெரிக்க ராணுவ வீரன் தலையை உயர்த்திப் பிடிக்கும் ஒருவரின் புகைப்படத்தை நேற்று ஸ்பீகல் வெளியிட்டது.

கடந்த ஆண்டு மூன்று நிராயுதபாணிகளான ஆப்கானிஸ்தானிகளின் கொலைத் தொடர்பாக புலனாய்வு அதிகாரி கைப்பற்றிய புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளதாக கருதப்படுகிறது.

ஆனால், ஸ்பிகல் பத்திரிகைக்கு இது எவ்வாறு கிடைத்தது என்ற விபரம் வெளியிடப்படவில்லை. புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளுக்கும்,ராணுவ மையங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ராணுவத்தினருக்கு எதிராக அமெரிக்க அதிகாரிகள் கொலைக் குற்றம் சுமத்தி வழக்கு பதிவுச் செய்துள்ளனர். புகைப்படத்தில் காணப்படும் 12 ராணுவத்தினரும் அமெரிக்க படையில் ஐந்தாவது ஸ்ட்ரைக்கர் பிரிகேடைச் சார்ந்தவர்களாவர்.

Leave a Reply

Top