You are here
Home > Uncategorized > அஸிமானந்தா அளித்த நேர்முகம்: உறுதியாக இருப்பதாக காரவான் இதழ்!

அஸிமானந்தா அளித்த நேர்முகம்: உறுதியாக இருப்பதாக காரவான் இதழ்!

புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் உத்தரவின் பேரிலேயே நடந்தது என்ற சுவாமி அஸிமானந்தா நேர்முகப் பேட்டி உண்மையானது என்பதில் உறுதியாக இருப்பதாக காரவன் மாத இதழ் அறிவித்துள்ளது. அஸிமானந்தா வெளியிட்ட தகவல்களின் ஆடியோ டேப் தங்கள் வசம் இருப்பதாகவும், அஸிமானந்தாவை ஏமாற்றி தகவல்களை பெறவில்லை என்றும் காரவன் மாத இதழின் எக்ஸ்க்யூடிவ் எடிட்டர் கேரளாவைச் சார்ந்த வினோத் கே ஜோஸ் தெரிவித்தார்.

அஸிமானந்தாவுடன் நடத்திய நேர்முகம் குறித்த ஆடியோ டேப்புகள் மற்றும் இதர  விளக்கங்களையும் காரவான் வெளியிட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஸிமானந்தாவை எவ்வாறு பேட்டி எடுக்க இயலும் என்று ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் ராம் மாதவும், காரவான் இதழில் வெளியான தகவல்கள் அடிப்படையற்றது என்று அஸிமானந்தாவின் வழக்கறிஞரும் கூறியிருந்தனர்.

இத்தகையதொரு நேர்முகம் நடக்கவில்லை என்று அஸிமானந்தாவும் பத்திரிகைக் குறிப்பில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து காரவானின் எக்ஸ்க்யூடிவ் எடிட்டர் விளக்கம் அளித்துள்ளார்.

ரிப்போர்ட்டரை சந்தித்ததை அஸிமானந்தா ஒப்புக்கொண்டார். ஆனால், நேர்முகப் பேட்டி அளித்ததை மறுத்தார். “2014-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி வழக்கறிஞர் என்று கூறிக்கொண்டு லீனா என்னை சந்தித்தார். ஆனால், நான் அவரது உதவியை மறுத்தேன். பின்னர் எனது சமூகப் பணிகளைக் குறித்து விவரிக்குமாறு கூறினார். அதனைக் குறித்து நான் கூறினேன். ஆனால், ஆர்.எஸ்.எஸ்ஸைக் குறித்தோ, மோடியைக் குறித்தோ எதனையும் கூறவில்லை” என்று அஸிமானந்தா தெரிவித்துள்ளார்.

அஸிமானந்தா அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து காரவான் மாத இதழின் மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வந்தன என்று வினோத் கே ஜோஸ் கூறுகிறார்.

அலுவலகம் முன்பாக சங்க்பரிவார அமைப்புகள் நடத்திய போராட்டம் தொடர்பான புகைப்படங்களை வினோத் கே ஜோஸ் சமூக இணையதளங்களில் நேற்று முன் தினம் வெளியிட்டார். காரவான் மாத இதழ் மீதான சங்க்பரிவார அமைப்புகளின் தாக்குதல்களை மத்திய அமைச்சர் கபில் சிபல் கண்டித்துள்ளார்.

Leave a Reply

Top