You are here
Home > Uncategorized > அஸிமானந்தாவின் கேரள உறவு:காரவன் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்!

அஸிமானந்தாவின் கேரள உறவு:காரவன் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்!

புதுடெல்லி: ஹிந்துத்துவா தீவிரவாதி சுவாமி அஸிமானந்தாவின் கேரள உறவு குறித்த புதிய தகவல்களை காரவன் இதழ் வெளியிட்டுள்ளது. புதிய வெளியீட்டில் அஸிமானந்தா வெளியிட்ட கூடுதல் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவில் நடத்திய தீவிரவாத தாக்குதல்கள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட உயர் மட்ட தலைவர்களின் ஆசியுடன் அரங்கேற்றப்பட்டதாக அஸிமானந்தா அளித்த பேட்டியின் தொடர்ச்சியை நேற்று முன் தினம் காரவன் வெளியிட்டது.

நாடு முழுவதும் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் பணியாற்ற தன்னை நியமித்தது கேரளாவைச் சார்ந்த கே. பாஸ்கரன் என்று அஸிமானந்தா தெரிவித்துள்ளார்.

அஸிமானந்தா மேலும் கூறியிருப்பது:

கேரளாவில் அமிர்தானந்தாயி ஆசிரமம் மற்றும் கண்ணூர் மத்திய சிறைக்குச் சென்றேன். சி.பி.எம். (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) தொண்டர்களுடன் போராடும் எமது உறுப்பினர்களை சந்திக்க கண்ணூர் சிறைக்குச் சென்றேன்.

60க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் அன்று கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சிறைத் தலைவருடன் உரையாடினேன். பழங்குடி இனத் தலைவர் சி.கே. ஜானுவுடன் சந்திப்பை நடத்தினேன். தலித் அமைப்புகளுக்கு முக்கிய செல்வாக்குடைய வர்கலாவில் பல நாட்கள் தங்கியிருந்தேன்.

பழங்குடியினர் பகுதியில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் (வி.கே.ஏ) அமைப்புச் செயலாளராக இருந்தவர் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பிரச்சாரக்கான பாஸ்கரன். மியான்மரில் இருந்து வந்த அவருடன் ஹிந்தியில் நான் உரையாடினேன். கேரளத்தை மையமாக கொண்டு பாஸ்கரன் செயல்பட்டு வந்தார்.

ஆனால், தன்னம்பிக்கை குறைந்ததால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த குஜராத்தின் டாங்க் மாவட்டத்திற்கு சென்று பணியாற்றினேன். அங்கே கோயில்களை கட்டி ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களை மதம் மாற்றினேன். 1997-ஆம் ஆண்டு 10 தினங்களில் 40 ஆயிரம் கிறிஸ்தவர்களை மதம் மாற்றினேன்.

மதமாற்றம் தீவிரமடைந்ததால் அமெரிக்கா மற்றும் வாடிகனில் உள்ள கிறிஸ்தவ தலைவர்கள் தலையிட்டனர். 30க்கும் மேற்பட்ட சர்ச்சுகளை இடித்துவிட்டு கோயில்களை கட்டினோம். இது தொடர்பாக சிறிய பிரச்னைகள் ஏற்பட்டன.

காங்கிரஸ் கட்சி இப்பிரச்னையை மக்களவையில் எதிரொலித்தது. ஆனால், அன்று வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அத்வானி துணை பிரதமராக இருந்தார். குஜராத்தில் அன்று பா.ஜ.க. ஆட்சி புரிந்தது. நரேந்திர மோடி அல்ல, கேசுபாய் படேல் முதல்வராக இருந்தார். சோனியா காந்தி, லாலு பிரசாத் யாதவ், தேவகவுடா, ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்டோர் டாங்கிற்கு வருகை தந்தனர்.

கேரளா, அந்தமான் தவிர வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்றுள்ளேன்.

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் இன்று வலுவாக இருப்பதற்கு காரணம் பாஸ்கரன்ஜி ஆவார். அவர் சில காலம் முன்பு மரணித்தார். பாஸ்கரன்ஜியின் மரணத்திற்கு பிறகு வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் செயலாளராக பொறுப்பேற்றவர் சோமையாஜுலு ஆவார்.இவ்வாறு அஸிமானந்தா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Top