You are here
Home > Uncategorized > அவமதிப்பு வழக்கு:டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனல் 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தீர்ப்பு

அவமதிப்பு வழக்கு:டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனல் 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தீர்ப்பு

புதுடெல்லி:ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனல் 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

நீதிபதி ஜி.எஸ்.சிங்க்வி தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பிற்கு
தடைவிதிக்க முடியாது என கூறிவிட்டது.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த் அளித்த புகாரில் இவ்வழக்கு பதிவுச் செய்யப்பட்டது. காஸியாபாத் மாவட்ட நீதிமன்ற ப்ராவிடண்ட் ஃபண்ட் ஊழலில் ஆள்மாறி சாவந்தின் புகைப்படத்தை டைம்ஸ் நவ் சேனல் ஒளிபரப்பியது.

20 கோடி ரூபாயை உயர்நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யவேண்டும். மீதமுள்ள தொகைக்கு வங்கி உத்தரவாதம் அளித்தால் போதும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Leave a Reply

Top