You are here
Home > Uncategorized > அல்ஜீரியா:விமான விபத்தில் 99 பேர் பலி!

அல்ஜீரியா:விமான விபத்தில் 99 பேர் பலி!

அல்ஜீர்ஸ்:வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் ராணுவ விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 99 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு வானொலி அறிவித்துள்ளது.

சி-130 ஹெர்குலிஸ் ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் ராணுவ வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

தலைநகர் அல்ஜீர்ஸூக்கு 500 கி.மீ. தொலைவிலுள்ள ஓம் எல் பவ்காய் என்னுமிடத்தில் அந்த விமானம் விபத்துக்குள்ளானதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Leave a Reply

Top