You are here
Home > Uncategorized > அரபு லீக்கின் பரிந்துரை: சிரியா நிராகரிப்பு!

அரபு லீக்கின் பரிந்துரை: சிரியா நிராகரிப்பு!

டமாஸ்கஸ்:11 மாதங்களாக சிரியாவில் தொடரும் அரசு எதிர்ப்பு போராட்டமும், ராணுவ தாக்குதலும் அமைதியான முறையில் முடிவுக்கு கொண்டுவர அரபு-ஐ.நா குழுவை சிரியாவுக்கு அனுப்பவேண்டும் என்ற அரபு லீக்கின் தீர்மானத்தை சிரியா நிராகரித்துள்ளது. அரபு அரசுகளின் பைத்தியத்தை இத்தீர்மானம் எடுத்து இயம்புவதாக கெய்ரோவில் சிரியாவின் பிரதிநிதி யூசுஃப் அஹ்மத் தெரிவித்துள்ளார்.

சிரியாவுடன் தூதரக உறவை துண்டிக்கும் அரபு லீக்கின் தீர்மானம் நேற்று முன்தினம் நிறைவேறியது. ஐ.நா பொது அவை சிரியா விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளது. சிரியா எதிர்கட்சியினருக்கு பூரண ஆதரவை தீர்மானம் அறிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமை கமிஷனின் தலைவர் நவி பிள்ளை பொது அவையில் பஸ்ஸாருல் ஆசாதை கண்டித்து உரை நிகழ்த்தவிருக்கிறார். ஆனால் தற்போது தொடரும் அனைத்து மோதல்களையும் முடிவுக்கு கொண்டுவந்த பிறகே சிரியாவுக்கு அரபு-ஐ.நா குழுவை அனுப்பவேண்டும் என்று ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸெர்ஜி லாவ்ரோவ் இதனை தெரிவித்துள்ளார். அரபு-ஐ.நா குழு என்ற பரிந்துரையை குறித்து ரஷ்யா ஆராய்வதாக மாஸ்கோவில் லாவ்ரோவ் தெரிவித்தார். அரபு லீக்கின் தீர்மானத்தை ஐரோப்பிய யூனியனும் ஆதரித்துள்ளது. அதேவேளையில், எதிர்ப்பாளர்களின் மையமாக கருதப்படும் ஹும்ஸில் நேற்றும் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்தியது.

Leave a Reply

Top