You are here
Home > Uncategorized > உலகம் > அயோத்திக்கு யாரும் அநீதியை இழைக்க முடியாது! – ஆதித்யநாத்

அயோத்திக்கு யாரும் அநீதியை இழைக்க முடியாது! – ஆதித்யநாத்

நேற்று (6.11.18) மாலை ஃபைஸாபாத்தில் தீபோத்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய உத்திர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அயோத்தி என்பது மரியாதை, பெருமை மற்றும் கௌரவத்தின் சின்னம். அயோத்திக்கு யாரும் அநீதியை இழைக்க முடியாது என்றும். இந்தப் புனித நகரம் கடவுள் ராமரால் அறியப்பட்டது என்றும் பேசியுள்ளார்.

மேலும் அயோத்தியில் ராமரின் பெயரில் புதிய விமான நிலையம் உருவாக்கப்படும். ராமரின் தந்தை அரசர் தசரதரின் பெயரில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்றும் பேசியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தென் கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் மற்றும் உ.பி. ஆளுநர் ராம் நாயக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Top