You are here
Home > Uncategorized > அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: ரூஹானிக்கு ஈரானில் எதிர்ப்பும், வரவேற்பும்!

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: ரூஹானிக்கு ஈரானில் எதிர்ப்பும், வரவேற்பும்!

டெஹ்ரான்: ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானி அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் தொலைபேசியில் உரையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஈரானில் அவருக்கு எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொது சபையின் கூட்டத்தில் பங்குபெற நியூயார்க் சென்றிருந்த ஈரான் அதிபர், அங்கிருந்தபோது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த 15 நிமிட தொலைபேசி உரையாடலை அமெரிக்க அதிபருடன் நிகழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் தலைநகர் டெஹ்ரானுக்கு அவர் திரும்பியபோது பெரும் ராஜதந்திர முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்று கூறி ஒரு புறம் பலத்த வரவேற்பு ரூஹானிக்கு அளிக்கப்பட்டது.

அதேவேளையில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் அவர் விமான நிலையத்துக்கு வந்தபோது கற்களையும், செருப்புகளையும் அவரை நோக்கி வீசியிருந்தனர். தாயகம் திரும்பிய அவரை, விமான நிலையத்தில் நாட்டின் உயர்மட்ட ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஇயின் பிரதிநிதி வரவேற்ரார்.

இது அவரது நடவடிக்கைகளுக்கு, காம்னஇயின் ஆதரவு இருப்பதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Top