You are here
Home > Uncategorized > அமெரிக்காவின் கியூபாவிற்கெதிரான கொள்கைக்கு ஜிம்மி கார்ட்டர் எதிர்ப்பு

அமெரிக்காவின் கியூபாவிற்கெதிரான கொள்கைக்கு ஜிம்மி கார்ட்டர் எதிர்ப்பு

ஹவானா:அமெரிக்காவின் கியூபாவிற்கெதிரான கொள்கைக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பல பத்தாண்டுகள் நீண்ட அமெரிக்காவின் வர்த்தக-பயண தடைகள் கியூபா மக்களின் வாழ்க்கையை தகர்த்துள்ளதாக ஜிம்மி கார்ட்டர் தெரிவித்துள்ளார்.

மூன்று தினங்கள் சுற்றுப் பயணமாக கியூபாவிற்கு வந்த ஜிம்மி கார்ட்டர் ரவுல் காஸ்ட்ரோ உள்பட முக்கிய தலைவர்களையும், எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசினார்.

கடந்த மாதம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்க காண்ட்ராக்டர் அலன் க்ரோஸை சிறையில் சென்று சந்தித்த் ஜிம்மி கார்ட்டர், ஜனநாயகத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும் ஆதரவாக செயல்பட கியூபா அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

86 வயதான ஜிம்மி கார்ட்டர் இரண்டாவது தடவையாக கியூபாவிற்கு வருகை தருகிறார்.

Leave a Reply

Top