You are here
Home > Uncategorized > அபுதாபி:ஏர் ட்ராஃபிக் கண்ட்ரோலராக முதன் முதலாக யு.ஏ.இ முஸ்லிம் பெண் நியமனம்

அபுதாபி:ஏர் ட்ராஃபிக் கண்ட்ரோலராக முதன் முதலாக யு.ஏ.இ முஸ்லிம் பெண் நியமனம்

அபுதாபி:விமானத்தை ஓட்ட மட்டுமல்ல, விசாலமான ஆகாயத்தில் விமானப் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும் தங்களால் இயலும் என்பதை யு.ஏ.இ பெண்மணி நிரூபித்துள்ளார்.

22 வயதான நவ்பா அல் அஃபீஃபி என்ற யு.ஏ.இயின் குடிமகள் பெண் ஏர் ட்ராஃபிக் கண்ட்ரோல் ஏரியா ஆஃபீஸராக பதவி ஏற்றுள்ளார். முதன் முதலாக யு.ஏ.இயைச்சார்ந்த ஒரு பெண்மணி ஏர் ட்ராஃபிக் கண்ட்ரோலராக நியமிக்கப்படுவது இது தான் முதல் முறையாகும்.

ஜெனரல் சிவில் ஏவியேசன் அதாரிட்டி ஏரியா சான்றிதழை வழங்கியுள்ளது. 3 ஆண்டுகள் கடினமான பயிற்சிக்கு பிறகே நவ்பா இந்த சான்றிதழை பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பிராந்தியத்தில் மிகப்பெரிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையமான ஷேக் ஸாயித் ஏர் நேவிகேஷன் செண்டரில் நவ்பா அல் அஃபீஃபி தனது பணியை துவக்கியுள்ளார்.

இதுக்குறித்து நவ்பா கூறியதாவது:’ஏர் ட்ராஃபிக் துறை பொதுவாகவே ஆண்களின் ஆதிக்கம் நிறைந்ததாகும். இத்துறையில் ஒரு பெண் பணி புரிவது கடுமையான சவாலாகும். இத்துறையில் முதல் யு.ஏ.இ பெண் என்ற நிலையில் எனது பொறுப்பு மிகப்பெரியதாகும். பயிற்சி காலம் மிகக்கடுமையானதாகும்’ என தெரிவித்த நவ்பா தான் வெற்றிகரமாக இதனை சாதித்ததில் மிக மகிழ்ச்சியாக உள்ளார்.

Leave a Reply

Top