You are here
Home > Uncategorized > அஜ்மீர் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ்.ஸை சிக்க வைக்க முயற்சியா?: ஷிண்டே மறுப்பு!

அஜ்மீர் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ்.ஸை சிக்க வைக்க முயற்சியா?: ஷிண்டே மறுப்பு!

புதுடெல்லி: அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சிக்க வைக்க நான் முயற்சித்ததாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே மறுத்துள்ளார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சிக்க வைக்க காங்கிரஸ் முயற்சி செய்வதாக பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார். இதை மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே மற்றும் இணையமைச்சர் ஆர்.பி.என். சிங் ஆகியோர் மறுத்துள்ளனர்.

இது குறித்து புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே, “அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பவேஷ் பட்டேலை எனக்குத் தெரியாது. அவரை ஒருபோதும் சந்தித்ததில்லை. யாரேனும் என் பெயரை பயன்படுத்தினால், நான் என்ன செய்ய முடியும்?” என்று கூறினார்.

இதே போல் ஆர்.பி.என். சிங், “நான் இப்புகாரை முற்றிலும் மறுக்கிறேன். இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. மத்திய இணையமைச்சர் பொறுப்பை நான் ஏற்று 11 மாதங்கள்தான் ஆகிறது” என்றார்.

Leave a Reply

Top