You are here
Home > Uncategorized > உலகம் > அக்டோபர் 31ல் ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி

அக்டோபர் 31ல் ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி

ஐக்கிய அரபு அமீரகம்- ஷார்ஜாவில் ஆண்டுதோறும் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும். அதே போல இந்த ஆண்டிற்கான புத்தக கண்காட்சி அக்டோபர் 31 முதல் நவம்பர் 10 வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பதிப்பகங்கள் பங்கெடுக்கும் இந்த புத்தக கண்காட்சியில் இம்முறை தமிழ் பதிப்பகங்களும் இடம் பெறுகின்றன.

கடந்த முறை புத்தக கண்காட்சிக்கு தமிழ் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  மற்றும்  எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணண் அவர்களும் கலந்து கொண்டனர். இம்முறை தமிழகத்தில் இருந்து சிறப்பு விருந்தினராக பிரபல நடிகரும், பாசிச எதிர்ப்பாளருமான பிரகாஷ் ராஜ் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Top